றீச்சா உணவுத் திருவிழா இடைநிறுத்தம்! முக்கிய அறிவிப்பு
கிளிநொச்சி- இயக்கச்சியில் உள்ள றீச்ஷா வளாகத்தில் கோலகலமாக இடம்பெற இருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
றீச்ஷாவில் ஓகஸ்ட் 7 முதல் 10 வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரம்மாண்டமான உணவுத் திருவிழா கோலகலமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்து.
மீள் வழங்கப்படும் பணம்
இந்தநிலையிலே, தவிர்க்க முடியாத காரணத்தினால், இன்றையதினமும்(9) நாளையதினமும் (10) நடைபெறவிருந்த உணவுத்திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்தோடு, இன்றையதினமும், நாளையதினமும் உணவுத்திருவிழாவிற்கான நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு செலுத்திய முழுத் தொகையும் நிகழ்நிலை வங்கி பரிமாற்றம் மூலம் மீளளிக்கப்படும் எனவும் றீச்சா நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் திட்டமிட்டு சிலர் இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் விசமத்தனமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதேசமயம் றீச்சா, வடக்கின் மாபெரும் சுற்றுலா தளமாக தற்போது மாறியுள்ளது.அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளையும் றீச்சா கவர்ந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.