குறையும் நீர் கட்டணம்!
மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.
மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
"எதிர்காலத்தில் நீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இதனூடாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயற்படபோவதில்லை.
தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று. எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் நிச்சயமாக நீர் கட்டணமும் குறைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.