மதுபானங்களின் விலையை குறைக்க கோரும் பெண் அமைச்சர்!
மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் நேற்றையதினம் நாடாளுமன்றில் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வருவாய் அதிகரிக்கலாம்
மதுபானங்களின் விலையை உயர்த்தினால், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். விலை குறைக்கப்பட்டால் அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்குவார்கள். அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்கும்போது வரி வருவாய் அதிகரிக்கலாம்.
இல்லை என்றால் இலங்கையில் மதுவிலக்கு மற்றும் கலால் திணைக்களத்தை மூட வேண்டியிருக்கும் எனவும் டயானா கமகே குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அற்ககோல் பானங்களின் விலை அதிகரித்துள்ளதால், ‘ஆப்பிள்’ என்ற பெயரில் மதுபானங்களுக்கான மேலதிக தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இலங்கை இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 80 வீதமானவர்கள் எமது தீவுக்கு ஒரு தடவையே வருகை தருகின்றனர்.
இரவு இசை நிகழ்ச்சிகள்
இலங்கையில் இரவு வாழ்க்கை முறை இல்லாததால் ஒருமுறைதான் வருகிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் தூங்க சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதில்லை. இலங்கையில் இரவுப் பொருளாதாரம் தேவை என பலர் என்னைத் தாக்கினர்.
எந்த தொழிலையும் ஊக்குவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்றும் டயானா கூறினார்.
மேலும், இசை நிகழ்ச்சிகள் காலை வரை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், இரவு 11 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை ஏன் நிறுத்த வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பிய அவர், கடற்கரை ஓரத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினால் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.