உங்களின் தொப்பையை ஈஸியா குறைக்கணுமா? கட்டாயம் இந்த பழங்களை பற்றி தெரிஞ்சிகோங்க
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் நிறைந்துள்ளன. இத்தகைய நன்மையுள்ள பழங்கள், நம்முடைய உடல் எடையைக் குறைக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்த வகையில் எந்தெந்த பழங்களை உண்பதால் நாம் உடல் எடையை குறைக்க முடியும் என நாம் இங்கு பார்ப்போம்.
பெர்ரி
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் கலோரிகள் குறைவாகவும், ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாகவும் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவும்.
திராட்சை
திராட்சை இன்சுலின் அளவைக் குறைக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும்.
அன்னாசி பழம்
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு வயிற்று உப்புசத்தையும் குறைக்கும். இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து, எடை இழப்புக்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
தர்பூசணி
குறைவான கலோரி கொண்ட தர்பூசணியில், நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் உங்களை நீரேற்றமாகவும், நிறைவாகவும் வைத்திருக்கும். அதோடு எடை இழப்புக்கும் உதவும்.
அவகேடோ
அவகேடோ பழங்களில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், அவை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்களால் நிறைந்துள்ளன. ஆகவே இவை பசியைக் கட்டுப்படுத்தவும் எடை குறைக்கவும் உதவும்.
கிவி
கிவியில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கும், இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. அதோடு எடை இழப்பையும் அதிகரிக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள்களில் நார்ச்சத்து மற்றும் தண்ணீர் நிறைந்துள்ளன. ஆகையால் வயிறு நிரம்பியதாக உணர வைப்பதோடு, எடை குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.
பேரிக்காய்
நார்ச்சத்து அதிகமாக உள்ள பேரிக்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இது வயிறு நிறைந்த திருப்தியை தருவதால் எடை இழப்புக்கு உதவுகின்றன.