சில மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை
காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) மண்சரிவு தொடர்பான நிலை 3 சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (24) பிற்பகல் 1 மணி முதல் நாளை (25) பிற்பகல் 1 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காலி மாவட்டத்தின் நெலுவ, நியகம, தவலம, நாகொடை கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை; நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, நோர்வூட், கொத்மலை கிழக்கு மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அவதானத்துடன் செயற்படுவதுடன், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.