சுகாதாரத் துறைக்கு ஆட்சேர்ப்பு; அடுத்த மாதம் 3,500 பேர் உள்ளீர்ப்பு
இலங்கை சுகாதாரத் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் 3,500 தாதியர்கள் மற்றும் 976 குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
3,500 பேர் உள்ளீர்ப்பு
பேராதனை போதனா வைத்தியசாலையில் புதிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சமீப காலமாக வெளிநாடு சென்ற அனைத்து மருத்துவர்களையும் மீண்டும் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அதேவேளை, நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ கூறுகையில், தற்போது சுமார் இருபதாயிரம் இதய நோயாளிகள் இருதய அறுவை சிகிச்சைக்காக பல்வேறு வைத்தியசாலைகளின் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.