தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள்
மட்டக்களப்பு - சின்ன உப்போடை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 4 ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்ன உப்போடை வாவிக்கு அருகாமையில் உள்ள குப்பை மேட்டிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மேலும் 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட நான்கு கைக்குண்டுகளையும் நீதிமன்ற உத்தரவை பெற்று அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தகவலறியப்பட்டுள்ளது.
மேலும் விசேட அதிரடிப்படையின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் குறித்த பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.