சுவிஸ் மக்களின் பாரம்பரிய இசைக்கருவியை மீட்டிப் பாடிய குழுவினர் முதலிடம்!
சுவிஸ் தேசியத் தொலைக்காட்சி நடாத்திய Stadt Land Talent போட்டியில் சுவிஸ் மக்களின் பாரம்பரிய இசைக்கருவியை மீட்டிப் பாடிய (Volg music நாட்டார் இசை) Tuufner Gruess குழுவினர் முதலிடத்தைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சி சுவிஸில் நேற்று 10.10.2021 இடம்பெற்றுள்ளது.
சுவிஸ் தமிழ் இளையவர்களான “ரீம் கிறியேசன்” நடனக்குழுவினரும் மேலும் இரு குழுக்களும் நடுவர்கள் வழங்கிய புள்ளிகளின் அடிப்படையில் 7 ம் இடத்திற்குச் சென்றனர்.
புலம்பெயர் சூழலில் தமது கல்வியையும் கற்றுக்கொண்டு, அதேநேரத்தில் தமிழையும் கற்றுக்கொண்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களைக் கலைக்கு அர்ப்பணித்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு இவ்வளவு தூரம் பயணப்பட்டு தங்களின் திறமையை வெளிக்கொணர்ந்த அந்த நடனக்குழு இளயவர்களை மனமாரப் பாராட்டுகின்றோம்.
அதேவேளை இனமான உணர்வோடு எம் இளையவர்களுக்கு வாக்களித்த அத்தனை உள்ளங்களையும் வணங்கி எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு எதிர்காலத்தில் எம்மவர் இதுபோன்ற அரங்கங்களை அலங்கரிக்க தங்கள் அனைவரது ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம்.