3000 மில்லியனுக்கும் மேல் நன்கொடை பெற்ற Rebuild SriLanka நிதியம்
அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கான நிதி திரட்டும் செயன்முறையின் கீழ் இதுவரை ரூபா 3421 மில்லியன் ரூபாவுக்கும் (சுமார் 3.4 பில்லியன்) அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்த மொத்தத் தொகை அமெரிக்க டொலர் மதிப்பில் 11 மில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக அவர் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

நன்கொடை
இந்த நிதி உதவிகள், உலகளாவிய ரீதியில் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள், இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் அதிகபட்ச நிதி அமெரிக்கா ஊடாகக் கிடைத்துள்ளதாகவும்,அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, மாலைதீவு, சவூதி அரேபியா, பிரான்ஸ், கொரியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற பல நாடுகளின் பங்களிப்பும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த உதவிகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வழிகாட்டலின் கீழ், துரிதமாகச் சீரமைப்பு நிவாரண நடவடிக்கைகளுக்கும் Rebuilding Sri Lanka என்ற திட்டத்துக்கும் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதிச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.