இந்த 8 பொருட்களும் சிவனுடன் இருப்பதற்கு இது தான் காரணமா?
சிவனுக்குள் அனைத்து உலகமும், தெய்வங்களும் அடக்கம் என்பார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களுக்கும் காரணமானவர் சிவனே.
சிவனை வழிபடுபவர்களுக்கு எம பயம், நவகிரகங்கள் உள்ளிட்ட எந்த விதமான தோஷங்கள் எதுவும் நெருங்காது என்பது நம்பிக்கை.
5 மற்றும் 8 ஆகிய எண்கள் சிவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.
சிவனுக்குரிய விரதங்கள் எப்படி 8 வகையாக சொல்லப்படுகிறதோ அதே போல் சிவ சின்னங்களும் 8 வகையாக சொல்லப்படுகின்றன.
இந்த சிவ சின்னங்கள் எட்டும் எப்போதும் சிவ பெருமானை விட்டு விலகாமல், அவருடனேயே இருக்கும்.
சிவ சின்னங்களும், அர்த்தங்களும்
அதிகமானவர்களால் வணங்கப்படும் தெய்வமாக சிவ பெருமான் உள்ளார்.
இவர் உருவமாகவும், அருவுருவம் என்ற லிங்க ரூபத்தில் அதிகமான இடங்களிலும் கோவில் கொண்டு காட்சி அளிக்கிறார்.
உலகின் பல நாடுகளிலும் பூமிக்கு அடியில் இருந்து சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்படும் அற்புதங்கள் தற்போது நிகழ்ந்து கொண்டு தான் உள்ளது.
சிவ பெருமானின் உருவம் என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது தலையில் பிறை சந்திரன் மற்றும் பொங்கி வரும் கங்கை, நெற்றியில் மூன்று கோடுகள் இட்ட திருநீற்று பட்டை, நெற்றிக்கண், கழுத்தில் பாம்பு, ஒரு கையில் திரிசூலம், மற்றொரு கையில் உடுக்கை, மற்றொரு கையில் ருத்ராட்ச மாலை ஆகியவை தான்.
அதே போல் சிவன் என்றால் கண்டிப்பாக அவருடன் அவரது வாகனமான நந்தி தேவர் கூடவே இருப்பார். இந்த 8 பொருட்களையும் சிவ சின்னங்கள் என்கிறோம்.
பிறை சந்திரன்
சிவனின் முடியை அலங்கரிக்கும் பிறை சந்திரன், பிறப்பு - இறப்பு என்ற வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் அடையாளமாகும். சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பார்கள்.
சிவன் மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலை வழங்கக் கூடியவர் என்பதால் மனதின் மாற்றங்கள், குழப்பங்கள் ஆகியவற்றிற்கு காரணமாகன சந்திரனை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
திரிசூலம்
திரிசூலம், தீமைகளை அழிக்கும் ஆயுதமாகும். இதுவே ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் குறிப்பதாகும்.
இது மனிதனின் மூன்று விதமான குணங்கள் என சொல்லப்படும் ரஜோ குணம் (மாறும் ஆற்றல்), தாமச குணம் (நெகடிவ், செயல்படாத, தேங்கி நிற்கும் நிலை), சாத்வ குணம் ( உயர்த்துதல், உணர்தல், சமநிலை) ஆகியவற்றையும் குறிப்பதாகும்.
உடுக்கை
சிவனின் கையில் எப்போதும் உடுக்கை வைத்திருப்பார். இது அண்ட ஒலி ஆற்றலை குறிப்பதாகும்.
ஒட்டுமொத்த உலகின் அசைவையும், இசை ஒலியையும் கொண்டதாகும். உலகை படைத்தவரும், அழிக்கும் வல்லமை கொண்டவர் ஈசனே என்பதை குறிக்கும் பொருளே உடுக்கை. அண்டத்தை தூய்மையாக்கி, காற்றை சுத்தப்படுத்தக் கூடிய உடுக்கை ஒலி, நாதம், இலக்கியம், மொழி ஆகியவற்றின் அடையாளமாகும்.
ருத்ராட்சம்
ருத்ராட்சம் சிவனின் கண்ணீரில் இருந்து தோன்றியது என்றும். இது அகிலத்தில் உள்ள அனைத்தையும் தனக்குள் கொண்டது என்றும், அண்ட இயக்கங்களையும், அவற்றிற்கான விதிகளையும் கொண்டதாகும்.
அதனால் தான் தியானம் செய்யும் போது ருத்ராட்சத்தை பயன்படுத்துவதால் அமைதி, மன, ஆத்ம மற்றும் உடல் திருப்தி ஏற்படுகிறது.
நாகம்
சிவனின் கழுத்தில் மூன்று சுற்றுகளாக நாகம் சுற்றி இருப்பதை கவனித்திருப்போம்.
இது குண்டலினி சக்தியை குறிப்பதாகும். இது மேலே உயர்ந்து பக்தர்களை பார்ப்பதாகும்.
மறுபிறவி, மாற்றம், முக்தி, குணப்படுத்துதல் ஆகியவற்றிற்கு காரணமாக உள்ளது. இது பலவிதமான உணர்வுகளின் அடையாளமாகும்.
நந்தி
நந்தி எனப்படும் காளை மாடு, சிவனின் வாகனமாக உள்ளது.
நீதி, அறியாமை, ஆற்றல் ஆகியவற்றை குறிப்பதாகும்.
விசுவாசத்தின் அடையாளத்தை இது காட்டுகிறது.
சிவனை எம பயம் மற்றும் மரணத்தில் இருந்து பக்தர்களை காக்க வல்லவர் என்பதை உணர்த்துவதாகும்.
நெற்றிக்கண்
சிவனின் நெற்றியில் உள்ள மூன்றாவது கண், விழிப்புணர்வை குறிப்பதாகும். மனோதத்துவம், ஆன்மிக உலகம் மற்றும் ஞானத்தின் ஆற்றலை செயல்பட வைப்பதன் அடையாளமாகும்.
நெற்றிக்கண், ஞானத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
இதனாலேயே சிவனை ஞான சத்குரு என்று அழைக்கிறோம்.
மூன்று கோடுகள்
சிவனின் நெற்றியில் உள்ள மூன்று கோடுகளும் மூன்று தொழில், மூன்று குணம், மூன்று காலத்தை குறிப்பதாகும்.
முக்கியமான இது மூன்று குணங்களின் அடையாளமாக கருதுப்படுகிறது.
இவற்றில் சாத்வீக குணம் என்பது தூய்மை, இரக்கம் ஆகியவற்றையும், ராஜ குணம் குழப்பம், ஈகோ, பொறாமை ஆகியவற்றையும், தாமச குணம் சோம்பல், கபடம், அழிவு ஆகியவற்றையும் குறிப்பதாகும்