பிக் பாஸ் வீட்டிலிருந்து நமீதா வெளியேறியதற்கு உண்மை காரணம் என்ன தெரியுமா?
பிக் பாஸ் வீட்டிலிருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினாரா அல்லது வெளியேற்றப்பட்டாரா என்பதே தற்போது கோலிவுட்டின் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிக் பாஸ் வீட்டிலிருந்து நமீதா மாரிமுத்து கடந்த வாரம் வெளியேறினார். அதற்கான கரணம் தற்போது வெளியாகியுள்ளது. நமீதா மாரிமுத்து வெளியேறுவதற்கு முந்தைய நாள் தாமரை செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிறகு தாமரைச்செல்வி சிரித்ததை தவறாக எடுத்துக்கொண்ட நமீதா வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப்போட்டு உடைத்துள்ளார். இதன் காரணமாக பிக் பாஸ் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.