ஆட்சியை கையளிக்க தயார்! ஆனால் இதை நிரூபிக்க வேண்டும்! கோட்டாபய
நாடாளுமன்றத்தில் உள்ள ஏதேனும் கட்சி ஒன்று சாதாரண பெரும்பான்மையை (113) நிரூபித்தால் ஆட்சியை ஒப்படைப்பதற்கு தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (04-04-2022) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றின் பின்னர் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி பெரும்பான்மையை நிரூபிக்க எதிரணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அதேவேளை, இந்த சந்திப்பில் பங்கேற்ற சுதந்திரக்கட்சி உறுப்பினரான சாமர சம்பத், ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe), அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) பிரதமர் ஆனாலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.