அனர்த்த பாதிப்புக்குள்ளான 262 கல் குவாரிகளில் மீள் புவியியல் ஆய்வு
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுப் பகுதிகளில் இயங்கும் 262 கல் குவாரிகளில் மீண்டும் புவியியல் ஆய்வை மேற்கொள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அபாய வலயங்களில் அமைந்துள்ள குவாரிகளில் இந்த முயற்சி கவனம் செலுத்துகிறது.
மண்சரிவு அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்படும் குவாரிகளுக்கான சுரங்க உரிமங்கள் உடனடியாக இடைநிறுத்தப்படும் என்று பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. தீபானி வீரக்கோன் தெரிவித்தார்.

இதுவரை, மண்சரிவால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரண்டு குவாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் குவாரிகளில், 127 குவாரிகள் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், 135 குவாரிகள் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.