புதுக்குடியிருப்பில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட ரவிகரன் எம்.பி
கன மழை காரணமாக முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
அந்த வகையில் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரமான சுண்ணாம்புச்சூளை வீதியானது நீண்டகாலமாக சீரின்றி காணப்படுவதாக மக்களால் நாடாளுன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதனால் பாடசாலை மாணவர்கள், அவசர மருத்துவ சேவையைப் பெறுவதற்காக செல்பவர்கள் என சகல தரப்பினரும் நீண்ட காலமாக பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் காணப்படுவதாகவும் பிரதேசவாசிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் வீதிச் சீரமைப்புத் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
அதேவேளை சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவு மக்கள் பெரும் இன்னகளுக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.