ரவி கருணாநாயக்கவின் தேசிய பட்டியலும்... ரணிலின் இரகசிய திட்டமும்!
சிலிண்டர் சின்னத்தின் தேசிய பட்டியலில் இருந்து ரவி கருணாநாயக்க அவர்கள் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் நுழைந்து இருக்கிறார். இது அந்த கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் அவர் தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பப்பட்டது கட்சியின் செயலாளர் சாமிலா பெரேரா வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கு பின்னால்தான் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் காய்நகர்த்தல் வேலை செய்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நல்லாட்சியின் போது மத்திய வங்கி பிணை முறி மோசடியை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது நிதி அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க அவர்களும் மத்திய வங்கி ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரன் அவர்களும் இணைந்து சுமார் 15 பில்லியன் ரூபாய்களை மோசடி செய்து இருந்தனர்.
இந்த மோசடியின் பிரதான ஆலோசகராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.
புதிய ஜனாதிபதி ஊழலுக்கு எதிராக செய்துள்ள பிரகடனத்தில் இந்த மத்திய வங்கி மோசடி மீள் விசாரணையும் ஒன்று. கடந்த ஆட்சியில் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதில் ஏற்படுத்தப்பட்ட தடங்கல் காரணமாக ஊழல் மோசடி வழக்கு கிடப்பில் போடப்பட்டு விட்டது.
மீளதொடங்கப்படும் வழக்கில் அர்ஜுன் மகேந்திரன் அவர்களின் உறவுக்காரர் அர்ஜுன் அலோசியஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
அடுத்த கைதாக ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட இருந்த நேரத்தில் ரணில் இரகசியமாக நகர்த்திய தேசியப்பட்டியல் மூலமாக ரவி கருணாநாயக்க நாடாளுமன்றம் அனுப்பப்பட்டுள்ளார்.
அதாவது தான் இந்த வழக்கில் இருந்து தப்புவதற்காக ரவி கருணாநாயக்க அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கௌரவ பரிசு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி.
வரும் நாட்களில் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டால் கூட ரணில் தனக்கு வழங்கிய பரிசு காரணமான அவர் விசுவாசத்தின் நிமித்தம் ரணிலை காட்டி கொடுக்கமாட்டார்.
எப்படி ஐ. தே. கட்சியை மஹிந்த அழித்தாரோ அதே பொதுஜன பெரமுன கட்சியை ரணில் அழித்தார்.
இப்போது ரணிலின் அடுத்த ஆட்டம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இல்லாது ஒழிப்பது. எப்படி அரகலய போராட்டம் மூலம் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் பெற்றதோ அதே போல ஒரு போராட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை இல்லாமல் ஒழிப்பது ரணிலின் திட்டம்.
இது ரணிலின் திட்டம் என்பதை விட ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள திட்டம். எப்போதுமே இந்தியா - இலங்கை மக்களை விட தனது நாட்டின் பூகோள அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இதைத்தான் தமிழ் விடுதலை இயக்கங்களை கட்டி வளர்த்தது தொடக்கம் அழித்தது வரை கடைப்பிடித்து வருகிறது.
இப்போது முழுவதும் சீனாவின் கொள்கைகைகளில் சிக்குண்டு நாட்டில் சீனாவின் மேலாதிக்கம் ஓங்க வழி கோலி இருக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி தொடர்ந்தால் இந்தியாவுக்கு பூகோளரீதியாக ஆபத்து சூழ்ந்துவிடும் அதற்குள் இந்தியா இலங்கையில் மீண்டும் ஒரு மக்கள் போராட்டத்தை ஊக்குவிக்கப்போகிறது.
ஏற்கனவே அமெரிக்கா அறுகம்பை என்று ஒரு நாடகத்தை நடத்தி அநுர அரசை ஆட்டம் காண முயற்சி செய்தது.
அமெரிக்கா எப்போதுமே ரணில் சார்ந்த ஆட்சியையே விரும்புகிறது. சீன சார்பு ஆட்சி அமெரிக்காவிற்கும் கசப்பாகவே உள்ளது.
வெகு விரைவில் கோட்டாபய காலத்தில் நிராகரித்த அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை அனுர அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால் அமெரிக்கா அறுகம்பை போல பல நாடகங்களை இலங்கையில் உருவாக்கி உல்லாச பயணத்துறையை விழுத்துவதுடன் இலங்கையை பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தை அநுர அரசு ஏற்றுக் கொண்டால் தனது சீன எதிர்ப்பு காய்நகர்த்தலுக்காக அமெரிக்க படைகள் இலங்கையில் தங்குவார்கள் அது நடந்தால் அமெரிக்கா அநுர ஆட்சி தொடர தட்டிக்கொடுப்பார்கள்.
இப்போது ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் விசேட அழைப்பின் மூலம் பல்கலைக்கழக விரிவுரையாளராக அங்கு சென்றுள்ளார்.
இந்த மாத கடைசி வரை அங்கு தங்கி இருப்பார். இந்த நேரத்தில் ரணிலை பல இராஜதந்திரிகள் மற்றும் ஆராய்ச்சி பகுப்பாய்வு பிரிவு சந்தித்து அடுத்த கட்ட நகர்வு பற்றி விளக்குவார்கள்.
இலங்கையில் இப்போது உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சநேதோஸ்ஜா இந்த புலனாய்வு முகவராக இருந்தவர். அவர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு தமிழ் கட்சிகள் உட்பட பல பிரமுகர்களை சந்தித்துள்ளார்.
அதன் ஒரு கட்டமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக ஹிருணிகா பிரேமச்சந்திரவை நாடாளுமன்றம் அனுப்ப கட்சி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
காரணம் எதிர்காலத்தில் அநுர அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டால் அதன்பின்னால் இருக்கப்போவது ஹிருணிகா அவரை இயக்கப்போவது ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியா.
ஹிருணிகா கோட்டாபயவுக்கு எதிராகவே தனியாளாக ஜனாதிபதி அலுவலகத்துக்குள் நுழைந்தவர் அவரை வைத்து இயக்குவது மிகவும் இலகு என்பது சந்தோஸ்ஜாவின் கணக்கு.
இந்தியா முற்று முழுதாக சீன சார்பு அநுர ஆட்சியை விரும்பவில்லை. இலங்கைக்கான சீன தூதுவர் கூட யாழ்ப்பாணம் சென்று யாழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்கு வழங்கியது சிறந்த மாற்றம் என்று புகழ்வதில் இருந்தே சீனா இலங்கையில் ஆழ கால் ஊன்ற விரும்பும் தொனி புரிகிறது.
அநுர அரசு மிக விரைவாக செயற்பட்டு ஏதாவது ஒரு குற்றத்தை நிரூபித்து ரணில் விக்கிரமசிங்க அவர்களின் குடியுரிமையை இரத்து செய்யாவிட்டால் மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் மூலம் அநுர அரசு கவிழ்க்கப்படும்.
ஏற்கனவே தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் புகைச்சல் ஆரம்பித்து விட்டது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவில். அக்கட்சியில் அதிக வாக்குகள் பெற்ற சிலர் அமைச்சர்களாகவில்லை.
அதைவிட முஸ்லிம் பிரதிநிதித்துவம் என்று ஏகப்பட்ட பிரச்சனை. சிலர் நினைக்கக்கூடும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் வாய்ந்த கட்சியை எப்படி கவிழ்க்க முடியும் என்று.
இங்கே உள்ளவர்கள் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானவர்கள் அரசியல் அறிவு இல்லாத புதியவர்கள். இவர்களில் பலர் அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்று குழப்பத்தில் உள்ளனர்.
இவர்களை குழப்பிவிடுவது மிக இலகு. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்ற 3 தமிழர்களில் ஒருவர் கூட அமைச்சராக்கப்படவில்லை இப்படி பல இடங்களில் பல புறக்கணிப்புகள் இப்படியானவர்கள் கட்சிக்கு எதிராக விரைவில் திரும்பிவிடுவார்கள். என முகநூலில் இவ்வாறான ஒரு தகவல் பதிவிடப்பட்டுள்ளது.