இரவில் முச்சக்கரவண்டிக்குள் சிக்கிய ரது அக்கா ; அதிர்ச்சியில் உறைந்த பொலிஸார்
முச்சக்கர வண்டியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் கொண்டு சென்ற பெண் ரது அக்கா என்ற வெலிபென்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிபென்ன பொலஸாரால் மேற்கொள்ளப்படும் சிறப்பு கண்காணிப்பு பணிகளின் போது, வெலிபென்ன-கெப்பெட்டிகஹலந்த வீதியில் பயணிக்கும் முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது, முச்சக்கர வண்டியில் பல சட்டவிரோத மதுபான கேன்கள் கொண்டு செல்லப்படுவதை பொலிஸார் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ரது அக்கா..
கெப்பெட்டிகஹலந்த பகுதியைச் சேர்ந்த ரது அக்கா என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் 35 வயதுடைய பெண், தனது சொந்த முச்சக்கர வண்டியில் மதுபானங்களை கொண்டு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் மதுபானம் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தப் பெண், இரவில் இந்த முச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி அளுத்கம, பேருவளை, தர்கா நகரம் மற்றும் கலவில பகுதிக்கு மதுபானம் கொண்டு சென்று வந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த முச்சக்கர வண்டியில் இருந்து கிட்டத்தட்ட 100 லீட்டர் சட்டவிரோத மதுபானத்தை பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.