அம்பானிக்கு முன்னரே பணக்காரர் ஆன ரத்தன் டாடா; ஆனால்!
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அம்பானி . இவர் பணக்காரர் ஆவதற்கு முன்னரே ரத்தன் டாடா இந்தியாவின் பணக்காரராக இருந்து வருகிறார். ஆனாலும் இன்று வரை ரத்தன் டாடாவால் அம்பானியை பணக்காரர்கள் பட்டியலில் முந்த முடியவில்லை.
இதற்கு காரணம் என்ன? அதாவது அம்பானி எப்போதும் பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து தொழில் செய்பவர் என்றும், அவருடைய நோக்கம் எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் எனவும் சொல்லப்படுகின்றது. தன் தொழிலில் எந்த நிலைக்கு சென்றாலும் மேல் நோக்கி சென்று கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருக்கும். அதனால் தான் அவர் எப்போதும் முதல் இடத்திலேயே இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் என்ற கிரிக்கெட் ஐபில் அணியைவிட சிறந்த அணிகள் கிரிக்கெட் விளையாடினாலும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மும்பை அணியாகத்தான் இருக்கும். இந்த வெற்றிக்கு காரணம் அரசியல் தான் என்றும் சொல்லப்படுகிறது.
இதேவேளை ரத்தன் டாடா அம்பானியின் குணத்திற்கு நேர் எ திரானவர். அவர் தானும் நன்றாக இருக்கவேண்டும், தன்னை சுற்றி உள்ள மக்களும், தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளிகளும் நன்றாக இருக்க வேண்டும் என அவர் நினைப்பவர். நாட்டில் ஏதேனும் ஒரு து யர சம்பவம் நிகழும்போது முதன் முதலாக நிவாரண நிதி வழங்கும் நபர் இவராகத்தான் இருப்பார்.
அத்துடன் தற்போது கூட தன் டாடா குழுமத்தில் வேலை செய்யும் நபர்கள் கொ ரோனா தொ ற்றால் உ யிரிழந்தால் அவருடைய பதவிக்காலம் முடியும் வரை அவருடைய குடும்பத்துக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும் என்பதை அறிவித்துள்ளார்.
மேலும் அவருடைய எண்ணமே ரத்தன் டாடா என்ற பணக்காரர் வாழ்ந்தார் என்று மக்கள் சொல்வதை விட ரத்தன் டாடா என்ற நல்ல மனிதர் வாழ்ந்தார் என்று இந்த உலகம் சொல்ல வேண்டும் என்பது தானாம்.