இலங்கை சிறுவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அரிய வாய்ப்பு!
தேசிய மிருகக்காட்சி சாலையில் அண்மையில் பிறந்த ஐந்து விலங்குகளுக்கு பெயர் சூட்டுவதற்கு சிறுவர் களுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளரான ஷர்மிளா ராஜபக்ஷ,தெரிவித்தார்.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஐந்து விலங்கு களுக்கு பெயரிட வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி நீர் யானை, ஒரு அரேபிய ஓரிக்ஸ், இரண்டு குரங்குக் குட்டிகள் மற்றும் ஒரு கழுதைக்குட்டி ஆகியன உள்ளன.
அதோடு நத்தார் தினத்தன்று அவைகளுக்கு பெயர் சூட்டப்படும் என்பதால், டிசம்பர் 20ஆம் திகதிக்குள் பொருத்தமான பெயரைப் பரிந்துரைத்து அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
எனவே குட்டி விலங்குக்காக முன்மொழியப்பட்ட பெயர், அனுப்புபவரின் பெயர், வயது, பாடசாலை மற்றும் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு 070 698 8448 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் எனவும் ஆவர் கூறியுள்ளார்.