அரிய வகை சிறுத்தை வாகனத்தில் மோதி உயிரிழப்பு
தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை, பெயாவெல் பகுதியில் வாகனத்தில் மோதுண்டு அரிய வகை சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தையை, கடந்த 22ஆம் திகதி இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த லிந்துலை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுத்தையின் உடலை ஹக்கல வனஜீவராசிகள் அலுவலகத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையில் அழிவை எதிர்நோக்கும் சிறுத்தைகள், மலையக வீதிகளில் வாகனங்களில் மோதுண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வாகன சாரதிகளின் கவனயீனமே இவ்வாறான வனவிலங்குகளின் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.