குழந்தையுடன் இருந்த தாய் பாலியல் பலாத்காரம்
குழும்ப பெண் ஒருவரை இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான பெண்ணொருவர் அருகில் உள்ள வீடொன்றில் வசிப்பவரால் இரண்டு தடவைகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிபில பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது.
கடந்த வரும் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. சந்தேக நபரின் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை.
எனினும் இந்த சம்பவம் மனவேதனையை ஏற்படுத்தியதால், கடந்த (21) பிபில பொலிஸ் நிலையத்துக்கு வந்து அப்பெண் முறைப்பாடு செய்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.