பிக்கு அரங்கேற்றிய சம்பவம்; நால்வரை கைது செய்த பொலிஸார்!
மொனராகலை தொம்பகஹவெல பிரதேசத்தில் 14 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் அப்பிரதேசத்தில் மத ஸ்தலமொன்றின் தலைவர் உட்பட நால்வரை தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜா- எல பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவி , தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த , காலப்பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியை சீரழித்த நால்வர்
சிறுமியின் உறவினர் இருவரின் உதவியுடன், சம்பந்தப்பட்ட மத ஸ்தலமொன்றின் தலைவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதேவேளை , சந்தேகத்தில் கைதான தலைவரின் சகோதரர் ஒருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த உடந்தையாகவிருந்த மாணவியின் உறவினர்களாவா் எனவும் பொலிஸார் கூறிட்யுள்ளனர்.