ரணிலின் கைது நடவடிக்கை அரசியல் ரீதியானது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நடவடிக்கை அரசியல் ரீதியானது என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உயர்நிலை பிரபுக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தல் அல்லது நடைமுறைப்படுத்தாதிருத்தல் இரண்டுமே அரசியல் ரீதியான தீர்மானங்களின் அடிப்படையிலானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மூடிமறைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த செயன்முறையும் அரசியல் ரீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிணை வழங்கும் நடவடிக்கைகளில் சட்ட மா அதிபர் திணைக்களம் தலையீடு செய்வதாகவும் அது அரசாங்கத்தின் அரசியல் தலையீடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிரான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் அரசியல் தலையீடு இன்றி மேற்கொள்ளப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடகத்தில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பேராசிரியர் நிர்மால் ரஞ்சித்தெவ்சிறி தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதில் முனைப்புடன் செயற்பட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.