எனக்கும் கட்சிக்கும் பேரிழப்பு; மங்கள சமரவீர மரணம் தொடர்பில் ரணில் கவலை
மங்கள சமரவீரவின் மரணம் தேசத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழந்துள்ளமை தொடர்பில் ரணில் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"நான் அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தபோது, அவர் குணமடையும் வரை காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அது நடக்கவில்லை. ஆனால் இன்று காலையில் கொரோனா வைரஸ் அவரது உயிரை பலியெடுத்துவிட்டது. மங்கள ஒரு முக்கியமான அரசியல் நபராக இருந்தார். அவர் இலங்கையில் நம்பகமான மற்றும் நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்,
அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிட்டார். அத்துடன் அவர் புதுமையான யோசனைகளைக் கொண்டு வந்ததுடன் ஒரு சிறந்த தொடர்பாளராக இருந்தார்.
அவர் நம் அனைத்து நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்திற்காக நின்றார்.
2015 முதல் 2019 வரை அமைச்சரவையில், அவர் வெளியுறவு மற்றும் நிதி விவகாரங்களை மிகவும் திறமையாக நிர்வகித்தார் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.