முரண்பாட்டை தோற்றுவிக்கும் ரணில் - குற்றம் சுமத்தும் பீரிஸ்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிப்பதாக டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
13 ஆவது திருத்தத்திற்கு மகா சங்கத்தினர் உட்பட தெற்கு அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உண்மை நோக்கம் காணப்படுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டில் இல்லாத பிரச்சினைகளை ஜனாதிபதி தோற்றுவிக்கிறார் என ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.