போராட்டகாரர்களிடம் சமாதானத்தை நாடும் ரணில்! திங்களன்று பேச்சு
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானத்தை நாடியுள்ளார்.
அதன்படி வரும் திங்களன்று கோட்டா கோ கமவின் சில பிரதிநிதிகளை பிரதமர் சந்திப்பார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ஒரு போர் நிறுத்தத்தையும்,நேரத்தையும் தேடும் என்றும் அவர் கூறினார். இது குறித்து ஹரின் எம்பி மேலும் கூறுகையில்,
கோட்டா கோ ஹோம் தொடரலாம், ஆனால் எதிர்ப்பாளர்களும் வந்து எங்களுடன் ஈடுபட வேண்டும், எனவே அவர்களும் குறித்த கலந்துரையாடலில் ஈடுபடவேண்டும்.
மேலும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் இரண்டு எதிர்ப்பாளர்களை இணைத்துக்கொள்ள பிரதமர் விரும்புவதாகவும் தெரிவித்த வர், புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டிற்கு செல்லுமாறு அழைப்பு விடுப்பதாகவும்,கண்காணிப்புக் குழுக்களில் இணைவதன் மூலம், எதிர்ப்பாளர்களில் சிலர் இறுதியில் புதிய கட்சியை உருவாக்கலாம் என்றும் ஹரின் எம்பி மேலும் தெரிவித்தார்.