மலையத்தில் ரணில் வெற்றிக்கொண்டாட்டம்!
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஹட்டன் நகரில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹட்டன் நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒன்று கூடி பட்டாசு கொளுத்தி கொண்டாடினர்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த தாய்நாட்டை மீளக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே என அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
அதோடு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அரசியல் பேதங்கள் இன்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்