ஜனாதிபதி ரணிலுக்கு விவசாயிகள் வழங்கிய அற்புதமான பரிசு!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையிலும், விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் வழங்கியதற்காக விவசாயிகள் இந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை மின்னேரிய பிரதேசத்தில் இன்றைய தினம் (02-03-2023) நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி ரணிலை சந்தித்த பொலன்னறுவை மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் ஆனந்த ராஜபக்ஷ உள்ளிட்ட விவசாயிகள் ஜனாதிபதிக்கு தமது சங்கத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு “ரன் வீ கரல” (தங்க நெற்கதிர்) என்ற பெயரிலான பரிசும் இங்கு வழங்கப்பட்டது.