போராட்டகாரர்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கும் ரணில்! (Video)
ராஜபக்ச அரசாங்கமே பயங்கரவாதிகள் என்றும், ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எங்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கின்றார் என போராட்டகாரர்கள் கூறியுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையொன்றுக்கு வருகை தந்த போதே தானிஷ் அலி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
போராட்டக்காரர்களை தீவிரவாதி என்று கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எங்களை கைது செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்து வருகின்றார்.
உண்மையில் தீவிரவாதத்தை கொண்டு செல்வது ரணில் ராஜபக்ச தான் எனவும் , மக்களுக்காக வீதியில் செல்லும் வித்தியாசமான போராட்டம் ஒன்றையும் நாங்கள் முன்னெடுப்போம் என தெரிவித்த அவர், மக்கள் எவ்வித பயமும் இன்றி போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.