தென்னாபிரிக்க அதிபரிடம் இருந்து ஜனாதிபதி ரணிலுக்கு கிடைத்த செய்தி
இலங்கையுடன் தற்போதுள்ள நெருக்கமான உறவுகளை மேலும் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி மதமெலா சிறில் ரமபோசா (Matamela Cyril Ramaphosa), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்க்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி (Matamela Cyril Ramaphosa), இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்கா கடந்த காலங்களில் இலங்கையுடனான உறவு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாகவும் அவர் (Matamela Cyril Ramaphosa) குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பையும் நட்புறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதில் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தும் எனவும் (Matamela Cyril Ramaphosa) தென்னாபிரிக்க ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.