மூடிய அறைக்குள் மொட்டு உறுப்பினர்களுடன் ரகசிய சந்திப்பில் ரணில்!
நேற்றிரவு கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஷங்ரிலா ஹோட்டலில் மூடிய அறைக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு உறுப்பினர்களுடன் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹோட்டலில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனின் திருமணம் நடைபெற்ற நிலையில் நிகழ்வில் முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர் .

விஐபி அறையில் விசேட சந்திப்பு
திருமண வைபவம் நடைபெற்ற மண்டபத்தை ஒட்டியிருந்த விஐபி அறையில் நடைபெற்ற விசேட அரசியல் கலந்துரையாடல் ஒன்று இட்ம்பெற்றதாக கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பொதுஜன பெரமுன செயலாளர் நாயகம் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடல் ஒன்றரை மணிநேரம் நீடித்ததுடன், அவர்கள் அனைவரும் அங்கு இரவு உணவையும் சாப்பிட்டதாக தெரியவருகிறது.
அதேவேளை அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கும் மற்றுமொரு சூப்பர் திருமண வைபவம் இன்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.