சர்வதேச அளவில் ஒரே நாளில் சர்வாதிகாரியாக மாறிய ரணில்!
நாட்டின் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக ரணில் விக்ரமசிங்க தன்னை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை அடித்து அவர்களது கூடாரங்களை கலைத்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இதனால் கொழும்பின் பல பகுதிகளில் காலிமுகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த 45 ஆண்டுகளாக ‘தாராளவாத ஜனநாயகவாதி என்ற தனது பிம்பத்தை, ஜனாதிபதி ரணில் அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தன்னை ஒரு சர்வாதிகாரியாக வெளிப்படுத்தியுள்ளார் என தமது உத்தியோபூர்வ டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.