சீன அதிகாரிகளுடன் ரணில் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்! அம்பலப்படுத்திய வசந்த முதலிகே
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையில் உள்ள சொத்துக்களை விற்பது தொடர்பில் சீன அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் “ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இதன் போது, சொத்துக்களை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவியை காத்துக் கொள்வதற்காகவும் பலப்படுத்துவதற்காகவும் இவ்வாறான நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிகளை சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தமது சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றன.
சர்வதேச நாடுகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை நாம் முறியடிக்க வேண்டும்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம்.
மேலும் மக்கள் ஆணையற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு எவருடனும் எந்த ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள முடியாதென்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.