ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் ; யாழில் அங்கஜன் வலியுறுத்து
நாட்டில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென சிறிலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்றையதினம் (13) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். தமிழரசு கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள்.
இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் நிலவி வருகிறது என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், ரணில் விக்ரமசிங்க நாட்டிலே கடந்த ஆட்சி காலத்தில் ஏற்படுத்திய பல்வேறு வேலை திட்டங்கள் தொடர்பிலும் தமது நிலைப்பாடு தொடர்பிலும் இதன் போது அங்கஜன் இராமநாதன் தெளிவு படுத்தினார்.