ராஜபக்சர்களுக்காகவே ரணில் வந்தார்; புஸ்வானமான கட்டுக்கதைகள்!
ராஜபக்சேக்கள் மட்டுமல்ல ஜோன்ஸ்டனும் இல்லாத அமைச்சரவை தற்போது புதிய ஜானாதிபதி ரணில் விக்கிரமச் சிங்கவின் தலைமையில் உருவாகியுள்ளது. ரணில் ராஜபக்சேக்களை மீளக்கொண்டுவரவே ஜனாதிபதியானார் என்று உருட்டியவர்களின் உருட்டுக்கள் புஷ்வானமாகிப்போயுள்ளது.
ஒருவேளை ரணில் ,ஜ்னாதிபதியாக தெரிவு செய்யப்படாமல் இதுவே டலஸ் வென்றிருந்தால்? ராஜபக்சேக்களுக்கு மட்டுமல்ல ராஜபக்சேக்களின் கையாள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வுக்கும் புதிய அமைச்சரவையில் ரணில் இடமளிக்கவில்லை.
மொட்டுக்கட்சிக்குள் ராஜபக்சேக்களுக்கு எதிரான ஒரு வலுவான தரப்பை புதிய ஜானாதிபதி ரணில் உருவாக்கியுள்ளார். ராஜபக்சேக்களைப்போன்று சிவப்பு சால்வையோடு திரிந்த தினேஸ் குணவர்த்தன சால்வையை தூக்கி வீசியதன் மூலம் ராஜபக்சேக்களின் உறவை துண்டித்துள்ளார்.
அதேசமயம் ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகப்பெருமவுக்கு ராஜபக்சேக்களின் ஆதரவு தரப்புக்கள் மாத்திரமே வாக்களித்திருக்கிறது அதனால்தான் அவர் தோல்வியடைந்தார். ஜனாதிபதி ரணில் ராஜபக்சேக்களின் காவலன் எனில் அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை கொடுத்திருப்பார்.
ஆனால் அவரோ அவர்கள் எவரையும் எடுக்காமல் ஏற்கனவே ஜோன்ஸ்டன், பிரீஸ் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டிருந்த அமைச்சுப்பதவியை இம்முறை பறித்துள்ளார்.
இந்நிலையில் ரணிலை ராஜபக்சேக்களின் பாதுகாவலர் என்று உருட்டியவர்கள் இனி வேறு வழியில் உருட்ட தொடங்குவார்கள் என சமூகவலைத்தளங்களில் தகவல் உலாவருகின்றது.