பிக்பாஸ் வீட்டில் இலங்கைப் பெண் ஜனனியிடம் சரணடைந்த போட்டியாளர்!
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு நபர் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.
இதனையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் எனும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் அந்த டாஸ்க் முடிவடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து பூட்டு விளையாட்டு தொடர்ந்தது.. அதன்படி நான் ஒரு ஸ்போர்ட்ஸ் சாம்பியன் என்று ஒருநாள் தௌலத்தாக சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்த ஜனனியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் முயல்குட்டி போல் ஓடிய ஜனனி, பாவத்திலும் பாவமான ராமை, டார்கெட் செய்ய, அவரோ, “அதென்ன கைது.. விலங்கு மாட்டுறது, பூட்டு போடுறதுனா நான் தான் கெடைச்சனா” என்கிற மோடில் மனுசன், “இந்த முறை சில்வண்டு சிக்காதுடா” என்று கடுமையாக ஓட்டம் பிடித்தார்.
ஆனால் அவரை துரத்திப் பிடிக்கும் சாகசத்தின்போது குழந்தை ஜனனியின் காலில் இடிபட்டு அடி விழ, “சனியன் எனக்குனே வருது” என்று அன்று தனா சொன்ன அதே மோடில் இப்போது ஜனனி இருந்தார்.

அதன் பின்னர், காலில் அடிபட்ட ஜனனிக்கு சிரமத்தை கொடுக்க கூடாதென யோசித்த நம் ராம் “சரி.. சரி.. விழுந்து கிழுந்து வெச்சிராத... இந்தா பூட்டித் தொல” என்று தானாக முன்வந்து சரணடைந்தார். அந்த மன்சுதான் சார் கடவுள் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.