பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜு
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஒரு பிரச்சனை வந்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்து கொண்டு பாட்டிலை சுற்றிவிட்டு ட்ரூத் ஆர் டேர் என்ற விளையாட்டை விளையாடுகின்றனர். பாட்டில் யாரை நோக்கி நிற்கிறதோ அவர்கள் மற்ற போட்டியாளர்கள் சொல்வதை செய்ய வேண்டும்.
அதில் முதலில் மாட்டிக் கொண்டவர் அக்ஷரா. அவரிடம் சிபி முதலில் இரண்டு அழுக்குத் துணிகளை துவைத்து வாருங்கள் என்று சொல்கிறார். ஏற்கனவே சிபியின் மேல் கொலை காண்டில் இருக்கும் அக்ஷரா முடியாது என்று முறைத்தபடி சொல்கிறார். பின்னர் விளையாட்டை தொடர்கின்றனர். அதில் ராஜு, அபிநயிடம் பவானியை லவ் பண்றீங்களா என்று ஏடாகூடமாக கேட்கிறார்.
இதனால் அதிர்ந்து போன அபிநய் என்னடா இப்படி கேக்குற என்று ராஜுவை பார்த்து சொல்கிறார். உடனே ராஜு அப்ப இல்லையா என்று எதிர் கேள்வி கேட்கிறார்.
இதற்கு பதில் அளிக்காமல் அமர்ந்திருக்கும் அபிநய் யை பார்த்து பவானி சிரித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் அபிநயிடம், ராஜு இவ்வாறு கேட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.