ராஜபக்ஷ குடும்பம் இந்தியாவில் தஞ்சமடைந்ததா? தூதரகம் வெளியிட்ட தகவல்
இலங்கையில் அமைதியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தில் வன்முறையை துண்டிவிட்ட நிலையில் கடும் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளனர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த தொடர் ஆர்ப்பாட்டங்களில் எதிரொலியாக, இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் (09-05-2022) தனது பதவியை இராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவர் குடும்பத்துடன் தலைமறைவானார்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மஹிந்த ஷ குடும்பத்துடன் இந்தியா தப்பிச்சென்றுவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இலங்கை ஊடகங்களில் செய்தி பரவியது.
இந்த நிலையில், இது முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது. இதை நம்ப வேண்டாம் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.