சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்காத ராஜபக்ஷ குடும்பம்!
காலிமுகத்திடலில் நேற்றைய தினம் இடம்பெற்ற 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ராஜபக்ச குடும்பத்தில் எவரும் பங்கேற்கவில்லை.
சுதந்திர தின நிகழ்வின் நிகழ்ச்சி நிரலில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, (Mahinda Rajapaksa) மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆகியோரது பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், அவ்விருவரும் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அத்தோடு முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, (Gotabaya Rajapaksa) சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) ஆகியோரது பெயர்கள் நிகழ்ச்சி நிரலிலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
மேலும், நேற்றைய நிகழ்வில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட போதிலும் எம்.பி சமல் ராஜபக்ச எம்.பி நாமல் ராஜபக்ச மற்றும் இராஜங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை.
எனவே, இம்முறை சுதந்திர தின நிகழ்வு ராஜபக்சக்கள் எவரும் பங்கேற்காத நிகழ்வாகவே அமைந்துள்ளது.