ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மீண்டும் ராஜயோகம்! பிரபல ஜோதிடரின் தகவல்
ராஜபக்ஷ குடும்பத்தில் ராஜயோகம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், (Mahinda Rajapaksa) நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமே (Basil Rajapaksa) உள்ளதாக நாட்டின் பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசு உரிய முறையிலான தேர்தல் ஒன்றுக்கு செல்ல நேரிடும் தன்மை, கிரக நிலைக்கமைய காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ள சனி மற்றும் குருப் பெயர்ச்சி காரணமாக நவம்பர் மாதம் 20ஆம் திகதியின் பின்னர் இலங்கையில் புதிய அரசியல் சக்தி ஒன்று முன்வரும்.
அந்தச் சக்தியினால் எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஆட்சி கைப்பற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.