ஈரான் ஜனாதிபதி மரணம்; ரஷ்யாவின் இராணுவ ராஜதந்திர தோல்வி!
ஈரான் ஜனாதிபதியின் திடீர் மரணத்தால் மரணத்தால் ரஷ்யாவின் இராணுவ ராஜதந்திர தோல்வி அடைந்துள்ளதாக இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கையை ஏற்று அதன் தலைமைத்துவத்தின் கீழ் அணி திரண்டுள்ள 63 நாடுகள் இருக்கின்றன.
அமெரிக்காவின் முதலாளித்துவக் கொள்கை
ஆனால் ரஷ்யாவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளாமல் சரி சமமாக நெருங்கிய நட்பு நாடுகளாக சீனா,வட கொரியா,ஈரான்,பெலாரஸ் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே காணப்படுகின்றன.
இந்தியா அமெரிக்காவுக்கு தலையையும்,ரஷ்யாவுக்கு வாலையும் காட்டி மதில் மேல் பூனையாக வலம் வரும் நாடாக தன்னை இனம் காட்டி நிற்கின்றது.
ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான ஈரான் ஜனாதிபதி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிர் இழந்திருக்கிறார்,ஆனால் இராணுவ நகர்வை செய்திருக்க வேண்டிய ரஷ்யா மீட்பு பணிக்கு ஆளனியை அனுப்பியுள்ளது.
ரஷ்யாவின் நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு உயிர் ஆபத்து இருக்கிறது என ரஷ்ய இராணுவ ,புலனாய்வுத் துறை நன்கு அறிந்திருந்தும் பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதிலும்,நவீன தொழில் நுட்ப வானூர்தியை வழங்குவதிலும் கோட்டை விட்டிருக்கின்றது .
50 ஆண்டு கால பழமை வாய்ந்த அமெரிக்க வானூர்தியை பாவிப்பதை தடுத்திருக்க வேண்டிய ரஷ்யா அசட்டையாக காரியமாற்றியிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.