இந்த மாகாணங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழையுடனான வானிலை நிலவும்!
இலங்கையில் உள்ள மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு, மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவு பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.