நாட்டில் தொடரவுள்ள மழையுடனான வானிலை; மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை
இன்று 02 முதல் நாட்டின் தென்மேற்கு பிராந்தியங்களில் மழையுடனான காலநிலை தீவிரமடையவுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

எச்சரிக்கை
சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும், ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரான வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1½ வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள் ; உடைக்கப்பட்ட கைகள் ; காதலனுடன் பெற்ற தாய் செய்த பெரும் கொடூரம்
மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் விழிப்புடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது