வெறிச்சோடிய நானுஓயா ரயில் நிலையம்... வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவதி!
நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் (09-07-2024) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நானுஓயா ரயில் நிலையமும் மூடப்பட்டு, அங்கே இராணுவத்தினரும் அதிகமான பொலிஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நானுஓயா ரயில் நிலையம் பயணிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் பயணிகள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், அதிகமான சுற்றுலாப் பயணிகள் நானுஓயா ரயில் நிலையத்துக்கு வருகை தந்து, மீண்டும் திரும்பிச் செல்கின்றனர்.
இதனால் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றித் திரிந்து பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.