கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை; விடுதியில் பொலிஸார் கண்ட காட்சி!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பிரபல சூதாட்ட விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மதுபான போத்தல்கள் சிக்கியுள்ளன.
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 100 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாடியிலும் மதுபான விற்பனை
மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களின் மொத்த பெறுமதி 25 இலட்சம் ரூபா என கூறப்படுகின்றது. 5 மாடிகளை கொண்ட இந்த சூதாட்ட விடுதியில் ஒரு மதுபான விற்பனை நிலையத்தை மாத்திரமே நடத்துவதற்கு மதுவரி திணைக்களத்தினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், குறித்த சூதாட்ட விடுதியில் ஒவ்வொரு மாடியிலும் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுவதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.