பொதுவெளியில் ராகுல் காந்திக்கு தண்டனை
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. குறித்த பயிற்சி முகாமிற்கு ராகுல் காந்தி 20 நிமிடங்கள் தாமதமாக வருகைதந்துள்ளார்.
இந்தநிலையில் முகாமின் நடத்தை விதிகளின்படி யார் தாமதமாக வந்தாலும் அவர்களுக்கான தண்டனை உண்டு என மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சச்சின் ராவ் கூறினார்.

இதனையடுத்து தாமதமாக வருகைதந்த ராகுல் காந்தி சச்சின் ராவை பார்த்து இதற்கான அர்த்தம் என்ன, நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த சச்சின் ராவ் கூட்டத்திற்குத் தாமதமாக வந்ததற்குத் தண்டனையாக 10 முறை தண்டால் போட வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கமைய ராகுல் காந்தி கூட்டத்தின் நடுவே தண்டால் எடுத்தார். இதனை பார்த்த அனைவரும் ராகுல் காந்தியை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.