ராகு-சந்திர சேர்க்கை ; ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுவது தான் ராகு. தற்போது ராகு கும்ப ராசியில் உள்ளது. இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் அடிக்கடி சேர்ந்து யோகங்களை உருவாக்கும். அப்படி சந்திரன் செப்டம்பர் 23 ஆம் திகதி கும்ப ராசியில் நுழையவுள்ளார்.
இதனால் இந்த ராசியில் உள்ள ராகுவுடன் சேர்ந்து அசுப யோகமான கிரகண யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
கடகம்: கடக ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அடுத்த 2 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செலவுகள் திடீரென்று எதிர்பாராத அளவில் அதிகரிக்கும். நற்பெயர் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. தொழில் செய்து வருபவர்கள் தங்கள் தொழிலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி: கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் எந்த வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வேலையை இழக்கும் சூழல் கூட ஏற்படலாம். பண விஷயங்களில் அசால்ட்டாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்மூடித்தனமாக யாரையும் நம்புவதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரிகள் பண பரிவர்த்தனைகளின் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்: மீன ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு-சந்திர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மோசமான விளைவுகளை எதிர்கொள்வார்கள். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனை தலைக்கு மேல் சென்று, பெரிய இழப்பை சந்திக்க வைத்துவிடும்.