2022 மார்ச் 07 ராகு-கேது பெயர்ச்சி; அதிக்ஷ்டம் பெறும் ராசிகள் எவை தெரியுமா?
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி பிலவ வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி(திங்கள் கிழமை) அன்று மதியம் 3.02 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது.
தற்போது ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பொதுவாக ராகு மற்றும் கேது இருவரும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர்.
அந்நேரத்தில் ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கொடுப்பார்கள். தற்போது நடக்கவுள்ள ராகு கேது பெயர்ச்சி 21.03.2022 முதல் 08.10.2023 வரை இந்த ராசிகளில் இருக்க போகிறார்.
ஜனன ஜாதக அடிப்படையில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய வீடுகளில் ராகு-கேது இருந்தால் அவர்களுக்கு வலுவான அதிர்ஷ்டம் இருக்கும் என்பது ஜோதிட விதி. மேலும், வரப்போகிற இந்த ராகு-கேது பெயர்ச்சியில் சில ராசிகள் வளர்ச்சியின் உச்சத்தை அடைய போகிறார்கள்.
சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்புகள் அதிகமாம். ஒரு சில ராசிகளுக்கு பாதிப்புகள் குறைய அதற்கேற்ற பரிகாரங்களை செய்ய வேண்டியது அவசியம்.
அந்தவகையில் ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளுக்கு பாதிப்புகள் குறைய பரிகாரம் செய்ய வேண்டும்.
மேலும் இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் வரவுள்ளதாம்.