18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு புதன் சேர்க்கை
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி.
அதே சமயம் ராகு ஒரு நிழல் கிரகம்.
இந்த ராகு தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த மீன ராசிக்கு எதிர்வரும் (07.02.2024) ஆம் திகதி நுழையவுள்ளார்.
இதனால் மீன ராசியில் புதன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.
இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு மீன ராசியில் ராகு புதன் சேர்க்கை நிகழ்ந்தது.
இவ்விரு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள்.
இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் நிகழும் ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறவுள்ளார்கள்.
மேலும் இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும்.
பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள்.
வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மார்ச் மாதத்தில் பிரகாசிக்கவுள்ளது.
அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
அரசு வேலை செய்பவர்கள் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள்.
மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், இக்காலத்தில் அந்த ஆசை நிறைவேறும்.
வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
இந்த பயணங்கள் நல்ல நிதி நன்மைகளை வழங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இச்சேர்க்கை காலமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
சிலர் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள்.
மேலும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் கிடைக்கும். காதலித்து வந்தால், அதில் வெற்றி பெறுவீர்கள்.