கிரிகெட் போட்டியை காண இலங்கை வந்துள்ள இந்திய பிரபல நடிகை!
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் கிரிகெட் போட்டியை காணபதற்காக , இந்திய பிரபல நடிகை ராய் லட்சுமியும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்துள்ளவர் தான் இந்திய பிரபல நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
உலக லெஜண்ட் கிரிக்கெட் போட்டி
அதன் பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ராய் லட்சுமி அண்மையில் இலங்கை வந்துள்ள காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள நிலையில், கிரிக்கெட் விளையாட்டை காண்பதற்காக இலங்கை வந்துள்ளார்.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் உலக லெஜண்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், நடிகை ராய் லட்சுமியும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.