நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் சம்பந்தனின் பூதவுடல்
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
உடல் நலக்குறைவினால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு (30) 11 மணியளவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் அவரது பூதவுடல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கிருந்து அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.